முதியவர் மயங்கி விழுந்து சாவு


முதியவர் மயங்கி விழுந்து சாவு
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலைய 6-வது பிளாட்பாரத்தில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தபோது மயங்கி விழுந்து இறந்து போனார். இதனை கண்ட அங்கிருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் சென்று உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரனை மேற்கொண்டு வருகிறார்.


Next Story