கட்டிலில் தூங்கிய முதியவர் உடல் கருகி சாவு


கட்டிலில் தூங்கிய முதியவர் உடல் கருகி சாவு
x

கட்டிலில் தூங்கிய முதியவர் உடல் கருகி உயிரிழந்தார்.

திருச்சி

திருச்சி பெரியகடை வீதி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்(வயது 67). இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவர் தங்கி இருந்த வீட்டின் மேல்தளத்தில் படுத்த படுக்கையாகவே இருந்துள்ளார். இவருக்கு அவரது மகன் ரமேஷ் உறுதுணையாக இருந்து பணிவிடை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது தந்தையை தூங்க சொல்லிவிட்டு ரமேஷ் பக்கத்து வீதியில் வசிக்கும் தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். புருஷோத்தமன் படுத்திருந்த இடத்தில் கொசுவர்த்தி சுருள் கொளுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கொசுவர்த்தி தவறி பக்கத்தில் இருந்த துணி மீது பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் கட்டில் மீதும் தீப்பிடித்ததால் கட்டிலில் படுத்திருந்த புருஷோத்தமன் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் நேற்று காலை அங்கு சென்ற ரமேஷ், புருஷோத்தமன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story