பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று புள்ளியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று புள்ளியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு புள்ளியல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பால் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுசெயலாளர் ரமேஷ் அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் அண்ணாமலை வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் தமிழக அளவில் அதிக எண்ணிக்கையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், கோட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு மற்ற துறைகளுக்கு உருவாக்கப்பட்டது போல் அலுவலகம், அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும், கூடுதல் பொறுப்பில் உள்ள ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி அரசு விதிகளின்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டம்
இத்துறையால் நடத்தப்படும் கணக்கெடுப்புகள் மற்றும் ஆய்வுகளுக்கு தனியாரை பயன்படுத்தாமல் இத்துறை மூலமே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வுகளின் தரத்தை மேம்படுத்தும் விதமாக உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
மாவட்ட தலைநகராகிய சிவகங்கையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி தரம் 2-ம் நிலையில் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.