சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு கொடுத்த மூதாட்டி குடும்பத்தினர் சரியாக கவனிக்காததால் எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய கோரிக்கை


சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு  ஆம்புலன்சில் வந்து மனு கொடுத்த மூதாட்டி  குடும்பத்தினர் சரியாக கவனிக்காததால் எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்ய கோரிக்கை
x

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் வந்து மூதாட்டி மனு கொடுத்தார். அவர் தனது குடும்பத்தினர் தன்னை சரியாக கவனிக்காததால் எழுதி கொடுத்த ெசாத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார்.

சேலம்

சேலம்,

ஆம்புலன்சில் வந்த மூதாட்டி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த பாக்கியம் என்ற 87 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர் ஒருவர் உதவியுடன் நேற்று ஆம்புலன்சில் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் இறந்து விட்டார். நானும் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பால் அவதியுற்று வருகிறேன். தற்போது என்னை குடும்பத்தினர் சிலர் சரியாக கவனிப்பதில்லை. அதனால் பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் கீழ் நான் எழுதி கொடுத்த சொத்தை ரத்து செய்து மீண்டும் எனது பெயருக்கு மாற்ற வேண்டும். மேலும் சொத்தை மீட்டு கொடுத்து பட்டினி சாவில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

பட்டா வழங்க வேண்டும்

எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர்.

அதில் 'நாங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆலச்சம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறோம். தற்போது நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் அனைத்தும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறி எடப்பாடி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. அதில் வீடுகளை காலி செய்யும் படி கூறப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்களான எங்களுக்கு வேறு இடமோ, வாழ்வாதாரமோ இல்லை. எனவே நாங்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.


Next Story