திருச்செங்கோடு அருகே மூதாட்டி கருகி சாவு


திருச்செங்கோடு அருகே மூதாட்டி கருகி சாவு
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே ஆண்டிவலசு மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கண்ணாயா (வயது 60). சம்பவத்தன்று மூதாட்டி வீட்டின் வெளியே விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கண்ணாயா சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை, முருகன் மற்றும் அவரது மகன் சிதம்பரம் ஆகியோர் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூதாட்டியை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கண்ணாயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story