பள்ளி வகுப்பறையில் குடியேறிய கட்டிட உரிமையாளர்


பள்ளி வகுப்பறையில் குடியேறிய கட்டிட உரிமையாளர்
x

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் கட்டிட உரிமையாளர் குடியேறினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி செட்டேரி கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. செட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 25 மாணவர்கள் பயின்று வந்தனர்.

கோடை விடுமுறைக்கு பின் நேற்று முன் தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியாக வகுப்பறைக்கு சென்றனர். அப்போது கட்டிடத்தின் உரிமையாளர் திடிரென பள்ளி கட்டிடத்தின் ஒரு அறையில் குடியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை 25 மாணவர்களை ஒரே அறையில் பாடம் நடத்தினார். இதனால் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story