யாசகம் கேட்பதுபோல் வந்து வீடுகளில் மர்ம குறியீடு.. வடமாநில பெண்ணை போலீசில் ஒப்படைத்த மக்கள்


யாசகம் கேட்பதுபோல் வந்து வீடுகளில் மர்ம குறியீடு.. வடமாநில பெண்ணை போலீசில் ஒப்படைத்த மக்கள்
x

வீட்டின் நுழைவு வாயிலை வடமாநில பெண் ஒருவர் ரகசியமாக சுட்டி காட்டும் விதமாக குறியீடு இட்டு சென்றதால் பொது மக்கள் சந்தேகமடைந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் யாசகம் கேட்பது போல் வீட்டின் நுழைவாயிலில் அடையாளம் வைக்கும் விதமாக கோடிட்டு சென்ற வட மாநில பெண் ஒருவரை பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

நித்திரவிளை அருகே நம்பாளி சுற்றுவட்டார பகுதி வீடுகளில் வட மாநில பெண் ஒருவர் யாசகம் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து, வீட்டின் நுழைவு வாயிலை ரகசியமாக சுட்டி காட்டும் விதமாக குறியீடு இட்டு சென்றதால் பொது மக்கள் சந்தேகமடைந்தனர்.

சினிமாவில் காட்டுவதை போல் விபரீத சம்பவத்தின் அடித்தளமா என குழப்பமடைந்த பகுதிமக்கள் அந்த பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அப்பெண்னை விசாரணை செய்த போலீசார், அவரின் கைரேகை பதிவுகளை பெற்று கொண்டு எச்சரித்து அனுப்பினர்.

1 More update

Next Story