தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
x

திட்டக்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ஆவினங்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர். இதில் 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆவினங்குடியை சேர்ந்த சசிக்குமார் (வயது 48) என்பது தெரிந்தது. மேலும் இவர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (34), சுப்பிரமணியன் (34) ஆகியோருடன் சேர்ந்து திட்டக்குடி பகுதியில் உள்ள 7 வீடுகளில் நகை திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து சசிகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடன் இருந்து 7 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய மணிகண்டன், சுப்பிரமணியன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story