தொழிலாளியை தாக்கியவர் கைது
தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 40). கூலி தொழிலாளி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது அத்தை மீது அதே கிராமத்தை சேர்ந்த உத்திராபதியின் மகன் தினேஷ்குமார்(27) அவரது இருசக்கர வாகனத்தில் வந்து மோதியதாக தெரிகிறது. இது தொடர்பாக சுப்பிரமணியனுக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று டீக்கடையில் நின்று கொண்டிருந்த சுப்பிரமணியனை அந்த வழியாக வந்த தினேஷ்குமார் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாகவும், அரிவாளால் வெட்ட முயன்று, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணியன் கீழப்பழுவூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தினேஷ்குமாரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.