தொழிலாளியை தாக்கியவர் கைது


தொழிலாளியை தாக்கியவர் கைது
x

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 44). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (51) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்து நந்தன்தட்டை விலக்கு பகுதியில் ராம்குமார் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ராமச்சந்திரன், ராம்குமாரை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராம்குமார் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன் விசாரணை நடத்தி, ராமச்சந்திரனை கைது செய்தார்.


Next Story