கார் கண்ணாடியை உடைத்தவர் கைது
கார் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சி பாலக்கரையை அடுத்த முதலியார்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பிரசாத் (26). இவர் ஸ்டிக்கர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான மணிகண்டன் (23) என்பவர் பிரசாத்தின் தாயிடம் ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், பிரசாத்தின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் அவரது சட்டையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story