விடுதலை சிறுத்தை கட்சி தலைவரை அவதூறாக முகநூலில் பதிவிட்டவர் கைது
விடுதலை சிறுத்தை கட்சி தலைவரை அவதூறாக முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாகுடி தெற்கு தெருவை சேர்ந்தவர் திருமேனி (வயது 36). இவர் தனது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பியும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கீழ செங்கல் மேடு கிராமத்தை சேர்ந்த கதிர்வளவன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து திருமேனியை கைது செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story