சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழை கொடுத்தவர் கைது


சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழை கொடுத்தவர் கைது
x

உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

சார்பதிவாளர் அலுவலகம்

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மலர்கொடி. இவர்களுடைய மகள் வினிதா. இந்தநிலையில் தேளூர் காலனி தெருவை சேர்ந்த சேகர் (வயது 50) என்பவர் தான் அனுபவித்து வந்த இடத்தை மலர்கொடி மற்றும் வினிதாவுக்கு விற்பனை செய்ய உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 5-ந் தேதி 2 ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த இடத்தை வாங்கிய மலர்கொடி மற்றும் அவரது மகள் வினிதா ஆகியோர் அங்கிருந்த முட்களை அகற்றினர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இந்த இடத்தை தாங்கள் வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது

இதையடுத்து அந்த ஆவணங்களை சரிபார்த்த போது அரியலூர் ஆர்.டி.ஓ.விடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் ஆவணத்தில் இணைக்கப்பட்ட தடையின்மை சான்று போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் உடையார்பாளையம் சார்பதிவாளர் (பொறுப்பு) சாந்தகுமார் (44) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story