பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் கைது


பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் கைது
x

பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே 23 வயதுடைய ஒரு பெண் அவரது செல்போனில் இருந்து தவறுதலாக ஒரு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிருக்கிறார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தபெண் சமூக வலைதளங்களில் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பெண்ணிடம் பேசிய நபர் அந்த பெண்ணின் பெயரில் ஒரு ஐ.டி.யை ஓப்பன் செய்து அதில் பெண்ணின் படத்தில் முகத்தை மட்டும் வைத்து விட்டு ஆபாச முறையில் மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து இலுப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி உத்தரவின் பேரில் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்தது திருவள்ளூர் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கோவர்தன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவர்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story