அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது


அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது
x

மானூர் அருகே அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டை பஞ்சாயத்தில் அளவந்தான்குளம் மற்றும் நெல்லைதிருத்து ஆகிய இரு பகுதி மக்களுக்கு இடையே குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 31-ந்தேதி அன்று மானூர் தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேசுவதற்காக ஒரு சமாதான கூட்டத்துக்கு தாசில்தார் முத்துலட்சுமி ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது பள்ளமடையை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து வருவாய் ஆய்வாளர் பத்மாவதி மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story