கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது


கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது
x

குள்ளஞ்சாவடி அருகே கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குள்ளஞ்சாவடி அருகே சிந்தாமணிகுப்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது (65) கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவரது கூரை வீட்டை மர்மநபர்கள் 2 பேர் தீ வைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தனபாலை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் கடலூர் சிப்காட் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது குறித்து தனபால் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டுக்கு தீ வைத்தது தொடர்பாக கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கம்பளிமேடு கிராமத்தை சேர்ந்த எழிலரசனை தேடி வருகின்றனர்.


Next Story