மின் மோட்டார் ஒயரை திருடியவர் கைது


மின் மோட்டார் ஒயரை திருடியவர் கைது
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மின் மோட்டார் ஒயரை திருடியவர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46), விவசாயியான இவருக்கு சொந்தமான வயலில் இருந்த மின்மோட்டார் ஒயரை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூர்த்தி(37) என்பவர் 15 மீட்டர் நீளத்துக்கு மின் மோட்டார் ஒயரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.


Next Story