கோவிலில் குத்துவிளக்கு திருடியவர் கைது
கோவிலில் குத்துவிளக்கு திருடியவர் கைது
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளத்தில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் கோவிலில் இருந்த 3 கிலோ எடையுள்ள பித்தளை குத்துவிளக்கை திருடி கொண்டிருந்தார். இதை பார்த்த நாகராஜன் அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் வேகமாக தப்பி ஓடினார். இதுகுறித்து நாகராஜன் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பொதுமக்கள் அவரை தேடி சென்றனர். அப்போது பொற்றையடி அருகே உள்ள கரம்பவிளை டாஸ்மாக் கடை அருகே வைத்து அந்த நபரை பிடித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புத்தளம் அருகே உள்ள கல்லடிவிளை காலனியை சேர்ந்த சுப்பிரமணி (வயது45) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து குத்துவிளக்கை மீட்டனர்.