துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... சகோதரிக்காக செய்த பகீர் செயல்..!
சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.45 மணியளவில் துபாய்க்கு இண்டிகோ ஏர்லைன் விமானம் செல்ல இருந்தது. அப்பொழுது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, விரைந்து செயல்பட்ட போலீசார், விமான நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விமானத்தை சோதனையிட்ட அதே நேரம், அழைப்பு வந்த செல்போனை எண்ணை வைத்து மிரட்டல் விடுத்தவரை போலீசார் கண்டறிந்தனர்.
விசாரணையில் அந்த நபர் ரஞ்சித்குமார் என்பதும், சகோதரியின் துபாய் பயணத்தை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. வெடிகுண்டு புரளியால், விமாமன் புறப்படும் நேரம் 4 மணி நேரம் தாமதமானது.
Related Tags :
Next Story