இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
x

பாளைளயங்கோட்டை அருகே இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள கோரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மில்டன் கனகராஜ் (வயது 26). இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். சம்பவத்தன்று அந்த பெண், மில்டன் கனகராஜ் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அவதூறாக பேசி அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் வழக்குப்பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்தார்.


Related Tags :
Next Story