வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை


வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை
x

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.


Next Story