வியாபாரியை காரில் கடத்திய 4 பேர் கைது
பொருட்கள் வாங்கி விட்டு ரூ.34 லட்சம் கொடுக்காததால் மளிகை பொருட்கள் வியாபாரியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி
பொருட்கள் வாங்கி விட்டு ரூ.34 லட்சம் கொடுக்காததால் மளிகை பொருட்கள் வியாபாரியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மளிகை பொருட்கள் வியாபாரி
கோவை மாவட்டம் கரும்புகடை பகுதியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (வயது 47). மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வந்தார். அதன்படி திருப்பூர் செல்லம்நகரை சேர்ந்த மனோஜ்குமார் (27) என்பவரிடம் ரூ.24 லட்சத்திற்கும், தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் (35) என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கு பூண்டு வாங்கியுள்ளார். இந்த தொகை ரூ.34 லட்சத்தை நீண்ட நாட்களாக திரும்ப கொடுக்கவில்லை.அவர்கள் பலமுைற கேட்டும் பணத்தை கொடுக்காமல் அஜ்மல்கான் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜ்மல்கான் மீது மனோஜ்குமாரும், விஜயகுமாரும் ஆத்திரம் அடைந்தனர். அவரை கடத்தி சென்று பணத்தை வாங்க இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 14-ந் தேதி மனோஜ்குமார், விஜயகுமார் மற்றும் இவருடைய நண்பர்களான தேனியை சேர்ந்த அஜய் (24), குமார் என்கிற கபாலி (47) ஆகிய 4 பேரும் கடந்த 14-ந் தேதி அஜ்மல்கானை திருப்பூர் இடுவம்பாளையத்திற்கு வரவழைத்து காரில் கடத்தி சென்றனர். தான் காரில் கடத்தி செல்லப்படுவதாக அஜ்மல்கான் தனது மனைவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அஜ்மல்கான் மனைவி திருப்பூர் வீராபாண்டி போலீசில் புகார் செய்தார்.
4 பேர் கைது
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்தி செல்போனையும் கண்காணித்தனர். அப்போது கடத்தல் கும்பல் அஜ்மல்கானை ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அஜ்மல்கானை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் மனோஜ்குமார், விஜயகுமார், அஜய் மற்றும் குமார் என்கிற கபாலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.