சாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக மீட்ட போலீசார்


சாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே சாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கட்டி விநாயகர் கோவில் தென் வடல் தெருவில் வசிக்கும் திருமலைச்சாமி மனைவி பத்திரகாளி (வயது 50). கூலித் தொழிலாளி. இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 10 கிராம் எடையுள்ள மோதிரம், கைசெயின் ஆகியவற்றை திருப்பி விட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ்நிறுத்தம் அருகே சென்றார். அப்போது கையில் இருந்த நகைப்பை தவறி சாலையில் விழுந்தது. அதனை யாரோ மர்ம நபர் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து பத்திரகாளி உடனடியாக கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன், ஏட்டு சங்கர் ஆகியோர் பஸ்நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சாலையில் கிடந்த நகைப்பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

உடனடியாக பஸ்நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த மூதாட்டியிடம் இருந்து நகையை போலீசார் மீட்டு பத்திரகாளியிடம் ஒப்படைத்தனர். 5 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு சாலையில் தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story