கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்..!
திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனின் கையை அறிவாளால் வெட்டிவிட்டு பிரவீன் தப்ப முயன்றார்.
அப்போது காவல் ஆய்வாளர் ராஜேஷ் பிரவீனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். அரிவாளால் வெட்டப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.
ரவுடி பிரவீன் மீது ஏற்கனவே திருவாரூர் காவல் ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்டவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story