போப் ஆண்டவரின் தூதர் இன்று கோவை வருகை


போப் ஆண்டவரின் தூதர் இன்று கோவை வருகை
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போப் ஆண்டவரின் தூதர் இன்று கோவை வருகை

கோயம்புத்தூர்


போப் ஆண்டவரின் இந்தியா, நேபாள நாடுகளுக்கான தூதர் லெயோ பொல்தோ ஜிரெல்சி. இவர், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக வாடிகன் நகரில் இருந்து விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.20 மணிக்கு கோவை வருகிறார். அவருக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர், 3 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் லெயோ பொல்தோ ஜிரெல்சி பங்கேற்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.45 மணிக்கு கருமத்தம்பட்டி செல்லும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பிற்பகல் 3.15 மணிக்கு புலியகுளம் அந்தோணியார் ஆலயத்துக்கும், மாலை 4 மணிக்கு கோவைப்புதூரில் உள்ள குழந்தை ஏசு ஆலயத்துக்கும், மாலை 5.45 மணிக்கு காட்டூரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்துக்கும் அவர் செல்கிறார்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11.15 மணிக்கு சவுரிபாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்கு செல்லும் போப்பின் தூதர் லெயோ பொல்தோ ஜிரெல்சி சிறப்பு திருப்பலியில் பங்கேற்கிறார். மதியம் 2.15 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க சபை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story