மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை,

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொருளாளர் தொழுவூர் மாறன், முதன்மை செயலாளர் டி.ருசேந்திரகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் பா.காமராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வன்முறையை கட்டுப்படுத்தாமல் அமைதி காக்கும் மத்திய-மாநில பா.ஜ.க. அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story