நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

கரூர்

வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனுர், மூலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.160- க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைந்ததாலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆடி அமாவாசை வருவதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story