ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயா்வு


ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயா்வு
x

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது.

திருச்சி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது.

ஆடிப்பெருக்கு

தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடு மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த வழிபாடுகளில் பூக்கள் பிரதானமாக உள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுகளில் விற்கப்பட்ட பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு:-

மல்லிகை கிலோ ரூ.500-க்கு...

கடந்த வாரம் 1 கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகை பூ நேற்று ரூ.500-க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.180-க்கு விற்ற முல்லை பூ ரூ.400-க்கும், ரூ.400-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்ற ஜாதிப்பூ ரூ.500-க்கும், ரூ.50-க்கு விற்ற கேந்தி ரூ.100-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்பங்கி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் அதிகரிக்கும்

இதேபோல் அரளி பூ ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், பன்னீர் ரோஜா ரூ.200-க்கும், கலர் ரோஜா ரூ.150-க்கும், கோழிக்கொண்டை ரூ.100-க்கும், வாடாமல்லி ரூ.150-க்கும், விருச்சிப்பூ ரூ.200-க்கும், தாமரை (ஒன்று) ரூ.10 முதல் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story