தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு ..!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு ..!
x
தினத்தந்தி 20 Dec 2023 10:07 AM IST (Updated: 20 Dec 2023 10:09 AM IST)
t-max-icont-min-icon

ஒரு கிராம் தங்கம் ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது..

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.80.20-க்கும், ஒரு கிலோ ரூ.80 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story