சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னை,
தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.44 ஆயிரத்து 480க்கு விற்கப்படுகிறது. ஒருகிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5 ஆயிரத்து 560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story