காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விலை அதிரடி உயர்வு


காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விலை அதிரடி உயர்வு
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

காதலர்தினத்தைெயாட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ஊட்டி ரோஜா விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

காதலர்தினத்தைெயாட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ஊட்டி ரோஜா விலை கடுமையாக உயர்ந்து. ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கி செல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகாலையிலேேய வியாபாரிகள் குவிவார்கள்.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக பண்டிகை, சுபமுகூர்த்த தினங்களில் விலை அதிகமாக இருக்கும்.

காதல் தினம்

இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினம் என்பதால் தோவாளை பூ மார்க்கெட்டில் ஊட்டி ரோஜா விலை உயர்ந்து காணப்பட்டது. பொதுவாக 1 கட்டு ஊட்டி ரோஜா ரூ.150 முதல் ரூ. 200 வரை விற்பனையாகும். ஆனால் காதல் தினத்தைெயாட்டி கடந்த சில நாட்களாக ஊட்டி ரோஜா விலை உயர்ந்து வந்தது. நேற்று ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. அவற்றை சில்லறை வியாபரிகள் விற்பனைக்காக வாங்கி சென்றனர்.

பூக்கள் விலை நிலவரம்

தோவாளை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.120, பிச்சி ரூ.1000, மல்லிகை ரூ.700, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.80, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.30, தாமரை ஒரு எண்ணம் ரூ.25, கோழிப்பூ ரூ.50, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.10, பட்டன் ரோஸ் ரூ.130, மஞ்சள் கேந்தி ரூ.60, சிவப்புக்கேந்தி ரூ.65, சிவந்தி மஞ்சள் ரூ.120, சிவந்தி வெள்ளை ரூ.150, கொழுந்து ரூ.70, மருக்கொழுந்து ரூ.100 என விற்பனையானது.


Next Story