சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி..!


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி..!
x

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சென்னை,

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி, ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் விலை குறைந்து கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதேபோல், பல்லாரி வெங்காயம், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்பட சில காய்கறி வகைகளின் விலையும் குறைந்திருக்கிறது.


Next Story