முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்வு-குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை


முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்வு-குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 8:30 PM IST)
t-max-icont-min-icon

முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

சேலம்

குண்டுமல்லி

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, வீராணம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பூக்களின் விலை குறைவாக இருந்தது. சில நாட்களை தவிர மற்ற நாட்களில் குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.400-க்கும் குறைவாக விற்கப்பட்டது.

தற்போது ஆவணி மாதம் பிறந்துள்ளதால் முகூர்த்த நாட்கள் வர உள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஆகிய முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன. இதனால் நேற்று பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.

ரூ.600-க்கு விற்பனை

அதாவது குண்டுமல்லி கிலோ ரூ.600 வரை விற்பனையானது. சன்னமல்லி கிலோ ரூ.500, முல்லை ரூ.400, ஜாதிமல்லி ரூ.280, காக்கட்டான் ரூ.160, கலர் காக்கட்டான் ரூ.120, மலை காக்கட்டான் ரூ.160, ரோஜா ரூ.160, சி.நந்தியா வட்டம் ரூ.400, சம்பங்கி ரூ.450, அரளி ரூ.150, வெள்ளை அரளி ரூ.200, செவ்வரளி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் வர உள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



Next Story