மயங்கி விழுந்து பேராசிரியர் சாவு


மயங்கி விழுந்து பேராசிரியர் சாவு
x
தினத்தந்தி 21 July 2023 12:14 AM IST (Updated: 21 July 2023 12:43 AM IST)
t-max-icont-min-icon

மயங்கி விழுந்து பேராசிரியர் இறந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் டைட்டஸ்பால்(வயது 36). இவர் பூவந்தி அருகே அரசனூர் விலக்கு பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 4 ஆண்டு காலமாக உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பல்கலைக்கழக கழிவறைக்கு சென்றவர் அதன்பின்னர் திரும்பி வரவில்லை. கழிவறையில் பார்த்தபோது உள்ளே தாழ்ப்பாள் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. மேல் துவாரம் வழியாக பார்த்த போது மயங்கிய நிலையில் உள்ளே கிடந்துள்ளார். அவரை மீட்டு கல்லூரி வாகனத்தின் மூலம் பூவந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை ராஜசேகர் பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன், அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story