மாணவிக்கு தவறான முறையில் மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்... தட்டி கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து


மாணவிக்கு தவறான முறையில் மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்... தட்டி கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து
x

கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை தட்டிக்கேட்ட மாணவன், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை தட்டிக்கேட்ட மாணவன், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு தவறான முறையில் செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த அதே கல்லூரியில் பயிலும் மாணவர் திலீப் குமார், பேராசிரியரிடம் தட்டிக் கேட்டதாக சொல்லப்படுகிறது.

பேராசிரியர் தூண்டுதலின் பேரில், கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அருள் அரசன் என்பவர், மாணவன் திலீப்குமாரை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story