கிரிவலப்பாதையில் மான்களை கண்டு ரசித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மான்களை கண்டு பொதுமக்கள் ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மான்களை கண்டு பொதுமக்கள் ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மான்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலையில் ஆயிரக்கணக்கான மான்கள், மயில்கள், குரங்குகள், காட்டு பன்றிகள் என பல்வேறு விலங்குகள் உள்ளன.
மலை பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மலையை சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதை பகுதிக்குள் வந்து விட கூடாது என்று வனத்துறையின் சார்பில் கிரிவலப்பாதையில் வனப்பகுதியில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கம்பி வேலிகளின் அருகில் வரை மலை பகுதியில் உள்ள மான்கள் வந்து நிற்கின்றன. இதனால் கிரிவலப்பாதையில் செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன் போன்ற தின்பண்ட பொருட்களை வழங்கி பார்வையிட்டு செல்கின்றனர்.
பொதுமக்கள் ரசித்தனர்
இந்த நிலையில் இன்று மாலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் சென்றனர்.
அப்போது கிரிவலப்பாதையில் நிருதிலிங்கம் அருகில் கம்பி வேலி அருகில் கூட்டமாக நின்று கொண்டிருந்த மான்களை அவ்வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
மேலும் அவர்கள் மான்களுக்கு உணவுகளை வழங்கினர். சிலர் மான்களை செல்போன்களில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.






