விழுப்புரத்தில்கவுன்சிலரை கொல்ல முயன்ற ரவுடி கைது


விழுப்புரத்தில்கவுன்சிலரை கொல்ல முயன்ற ரவுடி கைது
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் கவுன்சிலரை கொல்ல முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்


விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்ராம் (வயது 48). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் விழுப்புரம் நகராட்சி 42-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் ஒரு டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிர் என்கிற மெண்டல் கதிர் (40) என்பவர் சுரேஷ்ராமிடம் சென்று, தான் ஒரு ரவுடி என்றும் தனக்கு அடிக்கடி செலவுக்கு பணம் தர வேண்டும் என்றும் மிரட்டி வந்துள்ளார். அதற்கு சுரேஷ்ராம் பணம் தர மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று சுரேஷ்ராம், விழுப்புரம் பானாம்பட்டு பாதை மாரியம்மன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை கதிர் வழிமறித்து, பணம் கேட்டால் கொடுக்க மாட்டாயா? என்று கேட்டு அவரை திட்டி தாக்கி, தான் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சுரேஷ்ராம் அங்கிருந்து நகர்ந்தார். இருப்பினும் கதிர் தாக்கியதில் சுரேஷ்ராம் லேசான காயமடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கதிர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story