மானாமதுரை பகுதியில் பலத்த மழை


மானாமதுரை பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் பலத்த மழை பெய்தது.

சிவகங்கை

மானாமதுரை

சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை சாலைகள், கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கோடை வெயில் வாட்டி வைத்தது. மாலை 5 மணி அளவில் மானாமதுரை அண்ணாசிலை, தேவர் சிலை, காந்தி சிலை, வைகையாற்று பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்து. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட பகுதியில் திடீரென பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.


Related Tags :
Next Story