கோவில்பட்டியில் கொட்டித்தீர்த்த மழை


கோவில்பட்டியில் கொட்டித்தீர்த்த மழை
x

கோவில்பட்டியில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. மாலையில் வானில் கருமேகனங்கள் திரண்டது. 4 மணி அளவில் இடியுடன் கூடி பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை நீரும், கழிவுநீரும் கலந்து சென்றது.

இளையரசனேந்தல் ெரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் புகுந்து சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து சேகர், கிராம உதவியாளர் ராமமூர்த்தி, ெரயில்வே பணியாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் தடுப்புகள் வைத்து, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனர்.

வீடுகளில் தண்ணீர் புகுந்தது

மேலும் ஜமீன் பேட்டை தெருவில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, பாத்திரங்கள் மூலம் மழைநீைர வெளியேற்றினார்கள்.

ஒரு வீட்டில் மழை நீரில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி சிறுவனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மீட்டு வெளியே தூக்கி வந்தனர்.

புதுரோடு அரசு மருத்துவமனையில் இருந்து அண்ணா சிலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் வரை மழைநீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது.

மேலும் முச்சந்தி விநாயகர் கோவில் சந்திப்பு அருகில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி தடுமாறிச் சென்றது.


Related Tags :
Next Story