காலையில் சுட்டெரித்த வெயில்.. மாலையில் தூரல்...சென்னையை குளிர்வித்த மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது.
சென்னை,
கடந்த வாரங்களில் வெயில் வாட்டியதைத் தொடர்ந்து நேற்றிரவு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைபெய்தது. இந்நிலையில் இன்று மதியம் முதலே சென்னையில் பல இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து மாலையில் மழைபெய்தது.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும், விழுப்புரம், கோலியனூர், காணை, பிடாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைபெய்தது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, தருமபுரி, தேனி, சிவகங்கை கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.