அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன


அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன
x

ஆரல்வாய்மொழியில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வந்தது. எனவே, குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நாகர்கோவில் வனத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் வன ஊழியர் துரைராஜ் குரங்குகள் நடமாடும் பகுதியில் கூண்டு வைத்து அதில் பழவகைகளை போட்டு வைத்தார். இதில் 3 குரங்குகள் சிக்கின. பிடிபட்ட குரங்குகள் மலைப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

---


Next Story