வாலிபர் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்


வாலிபர் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்
x

திசையன்விளையில் வாலிபர் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். செருப்பு தைக்கும் தொழிலாளி. இவருடைய மகன் முத்தையா (வயது 19). இவர் கடந்த 23-ந் தேதி இரவு அங்குள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்புவிளை கக்கன்நகரை சேர்ந்த கரேஷ் (19), அவரது உறவினர்கள் மதியழகன் (31), பிரகாஷ் (31) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கூறி 9-வது நாளாக நேற்று முத்தையாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story