வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

வந்தவாசியில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியனின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ ஆகியோரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

இதையொட்டி வந்தவாசி தாலுகா அலுவலக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்துக்கு சங்க வட்டச் செயலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். தாசில்தார் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில் வட்ட பொருளாளர் ரஞ்சித்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.


Next Story