வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடையாள காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் அடிப்படை பணியாளர்கள், இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும், மாவட்ட வருவாய் அளவில் உள்ள கூர்மை பணியிடங்கள் பட்டியலிட்டு கூர்மை பணியிடங்களில் அரசால் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு மேல் பணி புரியும் அலுவலர்களை பணி மாறுதல் செய்து ஊழியர்களை காத்திட வேண்டும், 4-4-2012 தொடர்பான மேல்முறையீடு மனு மீது ஆணை பெற்று மெரிட் சீனியாரிட்டி நிர்ணயம் செய்து பி.சி., எம்.பி.சி. இட ஒதுக்கீடு படியும் திருத்திய துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும், விதிகளின்படி துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு உதவியாளர்களுக்கே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.