சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து துறை சார்பில் நடந்தது


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து துறை சார்பில் நடந்தது
x

போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, இணை போக்குவரத்து ஆணையர் (சாலை பாதுகாப்பு) சந்திரசேகர், இணை போக்குவரத்து ஆணையர் சென்னை தெற்கு சரகம் அ.முத்து, சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை போரூர் சுங்கச்சாவடியில் நடந்தது.

இதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரக திட்ட இயக்குனர், சென்னை மையம், சென்னை தெற்கு, தென்மேற்கு மற்றும் சென்னை தெற்கு சரக செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், வாகன ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. அதோடு சேர்த்து சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும் அலெர்ட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை வழங்குவது குறித்த செயல்முறை விளக்கமும் இந்த நிகழ்ச்சியில் அளிக்கப்பட்டது.

1 More update

Next Story