சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்


சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்
x

சாலை பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் செல்லாண்டிபாளையத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சவுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். சாலை பணியாளர்களின் 49 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும், போராட்ட காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, காலியாக உள்ள பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story