சந்திரயான் வெற்றிக்கு எந்திரவியல் துறையின் பங்கு முக்கியமானது


சந்திரயான் வெற்றிக்கு எந்திரவியல் துறையின் பங்கு முக்கியமானது
x

சந்திரயான் வெற்றிக்கு எந்திரவியல் துறையின் பங்கு முக்கியமானது என்று இஸ்ரோ விஞ்ஞானி கூறினார்.

வேலூர்

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்பில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் அசோசியேசன் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஸ்ரீராம்பாபு தலைமை தாங்கினார். பேராசிரியர் முரளிதர் வரவேற்றார். துறைத் தலைவர் பிரவீன்ராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முதுநிலை விஞ்ஞானி எல்.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் அனைவரும் வருங்கால விஞ்ஞானிகள். மனித உடலில் உறுப்புகளின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. அதுபோன்று பல துறைகளில் முக்கியமான துறையாக எந்திரவியல் துறை உள்ளது.

இத்துறையை சேர்ந்தவர்கள் எந்தத்துறையிலும் சாதிக்கலாம். பணிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக சொல்லப்போனால் சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது. சந்திரயான் விண்கலத்தின் வெற்றியிலும் இத்துறையின் பங்கு முக்கியமானதாகும். இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் பேராசிரியை சுஜா நன்றி கூறினார்.


Next Story