நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சூரியபிரசாத். வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் சின்னதகரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் கவுதமி என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டு இன்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுக்குறித்து போலீசார் இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கவுதமி குடும்பத்தினருடன் செல்ல மறுத்து தன் காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
பின்னா் இரு தரப்பினரையும் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி சமரசம் செய்து அனுப்பிவைத்தார்.
Related Tags :
Next Story