காதல் ஜோடி தஞ்சம்


காதல் ஜோடி தஞ்சம்
x

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டி கன்னிமானூத்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். அதே நூற்பாலையில் திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள சரளபட்டியை சேர்ந்த நாகேஸ்வரி (19) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் பழனியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். காதல்ஜோடியினர் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பிரகாஷின் ஊருக்கு அருகேயுள்ள ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு செல்லும்படி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story