சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 23). பி.ஏ. பட்டதாரியான இவர் ஒரு பிஸ்ெகட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் செந்தண்ணீர்புரம் அருகே உள்ள வரகனேரி பிச்சை நகரை சேர்ந்த அங்குசாமி மகள் அபிநயா ( 19) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலை பெற்றோர் பிரித்து விடுவதாக அஞ்சிய அவர்கள் நேற்று காலை இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் இரு தரப்பினரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதித்ததால் மணமகளை மணமகனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.